விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆன்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் சென்னை, டெல்லி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் செய்யப்பட்டு தற்போது நெய்வேலி சுரங்கத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட்டு முடிவடைந்துள்ளது.

vijay master

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நெய்வேலியில் நடைபெற்ற விஜய் பட ஷூட்டிங்கை தெரிந்துக்கொண்ட மக்கள் திரளாக வந்து ஷூட்டிங்கை பார்த்தனர். அப்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேருந்தின் மேல் ஏறி தன்னை பார்க்க வந்த மக்கள் அனைவருக்கும் கை காட்டினார்.

இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் இறுதி கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

alt="day night" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="05f1041f-326a-4ed4-aa6f-999e5a6f29ab" height="234" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Day-Night-article-inside-ad_22.jpg" width="390" />

இந்நிலையில் ஃபிப்ரவரி 14ஆம் தேதி, ‘ஒரு குட்டி கத’ என்றொரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன் பின் இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார் என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்த பாடலை எழுதியவர் அருண்ராஜா காமராஜ் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐந்து மணிக்கு ஒரு குட்டி கதை பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.